உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கவரப்பேட்டை ரயில் விபத்து பின்னணியில் சதி திட்டமா? | Train accident | Chennai | Train starts again |

கவரப்பேட்டை ரயில் விபத்து பின்னணியில் சதி திட்டமா? | Train accident | Chennai | Train starts again |

கர்நாடகாவின் மைசூரில் இருந்து பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் பீகாரின் தர்பங்கா நோக்கி சென்றுகொண்டிருந்தது. வெள்ளியன்று இரவு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே சென்றபோது சரக்கு ரெயில் மீது மோதியது. இந்த விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்தனர். ஒடிசா ரயில் விபத்து போல், சிக்னல் கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்ததாக தகவல் வெளியானது. ரயில் விபத்து தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக கவரப்பேட்டை ஸ்டேஷன் மாஸ்டர், லோகோ பைலட், உதவி லோகோ பைலட், கவரப்பேட்டை சிக்னல் ஆப்பரேட்டர்கள் உள்ளிட்ட 13 பிரிவு அதிகாரிகளுக்கு தெற்கு ரெயில்வே சம்மன் அனுப்பியது.

அக் 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை