உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருநங்கையுடன் இருந்த நண்பன் தலைமறைவு! | Transgender attacked | Crime | Salem Police

திருநங்கையுடன் இருந்த நண்பன் தலைமறைவு! | Transgender attacked | Crime | Salem Police

வாயில் துணியை வைத்து இரும்பு ராடால் அட்டாக் சடலமாக கிடந்த திருநங்கை சேலம் பொன்னம்மாபேட்டை தெற்கு ரயில்வே காலனியை சேர்ந்தவர் சரவணன், வயது 21. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்து திருநங்கையாக மாறியவர் தனது பெயரையும் வனிதா என மாற்றிக் கொண்டார். அதன் பிறகு அங்கிருந்து வெளியேறி வடக்கு ரயில்வே காலனியில் குடியேறினார். திருநங்கை வனிதாவுக்கு திருச்செங்கோடை சேர்ந்த நவீன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இன்று காலை திருநங்கை உறவினர் ஒருவர் வனிதாவை பார்க்க வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு வனிதா ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதை பார்த்து கூச்சலிட்டுள்ளார். திரண்டு வந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து அம்மாபேட்டை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் வனிதாவின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

ஆக 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை