உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பொங்கல் முடிந்து மக்கள் சென்னை திரும்புவதால் நெரிசல்

பொங்கல் முடிந்து மக்கள் சென்னை திரும்புவதால் நெரிசல்

பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு சென்ற மக்கள் மீண்டும் சென்னைக்கு திரும்புகின்றனர். சொந்த வாகனங்கள் வைத்திருப்போர் பகல் நேரத்திலேயே வருவதால் மாலையில் சென்னையை நெருங்குகின்றனர். ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் குவிவதால் டிராபிக் ஜாம் ஏற்படுகிறது. சென்னை நுழைவு வாயிலான ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வரிசை கட்டி நின்ற வாகனங்கள் ஊர்ந்து சென்றன. breath இதே போல் பெருங்களத்தூர், ஜிஎஸ்டி சாலையிலும் வாகன நெரிசல் ஏற்பட்டது. பெருங்களத்தூரில் இருந்து வண்டலூர் இரணியம்மன் கோயில் வரை சுமார் 2 கிலோ மீட்டர் நீளத்துக்கு வாகனங்கள் நின்றன. மேம்பாலத்திலும் நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஸ்தம்பித்தன.

ஜன 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ