உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நடுரோட்டில் போலீசாரை காய்ச்சி எடுத்த வக்கீல், மகன் | Lawyer son | Trichy police | Manaparai

நடுரோட்டில் போலீசாரை காய்ச்சி எடுத்த வக்கீல், மகன் | Lawyer son | Trichy police | Manaparai

தடுக்க வந்த போலீசிடமே லந்து வழக்கறிஞர், மகனுக்கு சிக்கல் வேடிக்கை பார்த்த போலீஸ் தூக்கியடிப்பு திருச்சி மணப்பாறையை சேர்ந்தவர் மோகன்தாஸ். மணப்பாறை வழக்கறிஞர் தலைவராக இருந்து வருகிறார். சம்பவத்தனறு இரவு 9 மணி அளவில் மணப்பாறையில் உள்ள டீக்கடை மீது மோகன் தாஸ் மகன் தீபன் குடிபோதையில் கற்கள் மற்றும் கட்டைகளை வீசி பொருட்களை சேதப்படுத்தி கொண்டிருந்தார். மோகன்தாசும் அப்போது அங்கிருந்தார். தகவலறிந்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தினேஷ் மற்றும் போலீசார் சென்றனர். தீபனை தடுத்தனர். அப்போது எஸ்ஐ யின் இருசக்கர வாகனம் மீது கற்களை வீசியும், போலீஸ்காரர் வினோத் குமாரின் தலைக்கவசத்தை உடைத்தும் அடாவடியில் ஈடுபட்டுள்ளார் தீபன். தடுக்கச் சென்ற தலைமை காவலர் பாஸ்கரின் பின் தலையில் கையால் அடித்துள்ளார். போலீசார் எவ்வளவு அறிவுரை கூறியும் தடுத்தும் அதையும் மீறி தொடர்ந்து கற்களை வீசி ரகளையில் ஈடுபட்டார். மோகன்தாஸ் தடுத்தும் பலனில்லை. அப்பாவையும் தீபன் அடிக்க முயன்றார். ஒரு கட்டத்தில் கோபமடைந்த வக்கீல் மோகன்தாஸ், போலீஸ் மேலயே கைவைக்கறியா என கேட்டு தனது மகனை லத்தியால் அடித்து அமைதிப்படுத்த முயன்றார். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. போலீசாரை தாக்கிய தீபனை போலீசார் கைது செய்தனர். வழக்கறிஞர் சங்க தலைவர் மோகன்தாஸ் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. குடிபோதையில் ரகளை செய்த தீபனை பிடித்து செல்லாமல் அலட்சியமாக வேடிக்கை பார்த்த எஸ் ஐ மற்றும் 2 போலீசார் மணப்பாறையில் இருந்து திருச்சி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். இந்த சம்பவம் திருச்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

பிப் 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !