கனமழையால் நடந்த சோகம்: கண்டுகொள்ளாத அரசு | Rain | Trichy Rain | Flood
திருச்சியில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் மாவட்டம் முழுவதும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கருமண்டபம் ஆர்எம்எஸ் காலனி, அசோக் நகர் பகுதியில் வீடுகளை சூழ்ந்த தண்ணீர் 4 நாட்களாகியும் வெளியேற்றப்படவில்லை. இதனால் வீடுகளை சுற்றியும், சுவரின் ஓரத்திலும் பச்சை நிறத்தில் பாசானம் படிந்து காணப்படுகிறது. தண்ணீரை வெளியேற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
டிச 15, 2024