/ தினமலர் டிவி
/ பொது
/ கல்லூரி ஹாஸ்டலில் நுழைந்து ஆசாமிகள் வெறியாட்டம்: பரபரப்பு தகவல் ganja gang burglars trichy polytechn
கல்லூரி ஹாஸ்டலில் நுழைந்து ஆசாமிகள் வெறியாட்டம்: பரபரப்பு தகவல் ganja gang burglars trichy polytechn
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே ஸ்ரீஆதிசங்கரா பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. அங்குள்ள மாணவர் விடுதியில் 50-க்கு மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர் நேற்றிரவு மூன்று இருசக்கர வாகனங்களில் கருப்பு நிற மாஸ்க் அணிந்து 9 பேர் கொண்ட கும்பல் மாணவர் விடுதிக்குள் புகுந்தது. அந்நேரம் காவலாளி இல்லை. மாணவர்கள் தங்கி இருக்கும் 2 அறைகளின் கதவை அடித்து உடைத்து உள்ளே நுழைந்தனர். அதிர்ச்சியடைந்த மாணவர்கள் பயத்தில் கூச்சலிட்டனர். மர்ம நபர்கள் மாணவர்களின் கழுத்தில் கத்தியை வைத்தனர். சத்தம் போட்டால் கொன்றுவிடுவோம் என மிரட்டினர். பீதியடைந்த மற்ற மாணவர்கள் தங்கள் அறையை உள்பக்கம் தாழிட்டுக் கொண்டனர்.
மே 18, 2025