நள்ளிரவில் பீதியை கிளப்பும் இளைஞர்களின் அலப்பறை | Youth atrocities | Cake cutting in midnight | Tric
திருச்சி ஜேம்ஸ் ஸ்கூல் எதிர்ப்புறம் ஐடி நிறுவனம், வணிக வளாக கட்டடம் உள்ளது. இந்த கட்டடத்தின் முன்பு தினமும் மாலை 7 மணிக்கு மேல் இளைஞர்கள் சிலர் கும்பல் கூடி அரட்டை அடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். வணிக வளாகத்தில் இருந்து வேலை முடிந்து செல்லும் பெண்களை கேலி, கிண்டல் செய்து, சைகை காட்டுகின்றனர். புகார் கிடைத்து போலீஸ் வரும்போதெல்லாம் தப்பி ஓடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த இளைஞர்கள் கூட்டம் செய்யும் அட்டகாசத்தால் அந்த வழியாக செல்லும் பெண்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இந்த நிலையில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் நள்ளிரவில் ஒன்று கூடி 3 பேருக்கு மாலை போட்டு பட்டா கத்தியை வைத்து கேக் வெட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சி இப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.