போர் நிறுத்த ஒப்பந்தம் இல்லை: மறுக்கிறது ஈரான்! |Trump announcement | Israel - Iran Conflict
இஸ்ரேல் ஈரான் இடையே மூன்று வாரங்களாக போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கிய அமெரிக்காவும் ஈரானின் விமானத்தளங்கள், அணுமின் ஆராய்ச்சி நிலையங்கள் மீது குண்டு வீசின. இதற்கு பதிலடியாக நேற்றிரவு ஈரான் கத்தாரில் அமைந்துள்ள அமெரிக்க படைத்தளத்தை ஏவுகணைகளால் தாக்கியது. இந்த சூழலில் இஸ்ரேலும் ஈரானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அடுத்த 6 மணி நேரத்திற்கு பிறகு ஈரானும், 12 மணி நேரத்திற்கு பிறகு இஸ்ரேலும் போர் நிறுத்தத்தை அமல்படுத்தும். 24 மணி நேரத்தில் போர் நிறுத்தம் முழுமையாக அமலுக்கு வரும். இரு நாடுகளும் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு வாழ்த்துகள். மத்திய கிழக்கு நாடுகள் ஒருபோதும் அழியாது. அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் மற்றும் உலகை கடவுள் ஆசிர்வதிப்பார் என அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். முன்னதாக இந்தியா - பாகிஸ்தான் போரின் போதும் கூட டிரம்ப் தான் போர் முடிவுக்கு வருவதாக முதலில் அறிக்கை வெளியிட்டு இருந்தார். ஆனால் இப்போது டிரம்ப் அறிக்கைக்கு ஈரான் வெளியுறவுத்துறை மறுப்பு தெரிவித்து உள்ளது. இப்போதைக்கு போர் நிறுத்தம் அல்லது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து எந்த ஒப்பந்தமும் இல்லை.