உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விஜய்க்கு பக் பக்... உளவுத்துறை பகீர் ரிப்போர்ட் karur stampede | vijay to arrest | tvk karur issue

விஜய்க்கு பக் பக்... உளவுத்துறை பகீர் ரிப்போர்ட் karur stampede | vijay to arrest | tvk karur issue

கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பொதுச்செயலாளர் ஆனந்த் உள்பட 4 முக்கிய நிர்வாகிகள் மற்றும் பலர் மீது கரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கரூர் மாவட்ட நிர்வாகிகள் 2 பேர் கைதானார்கள். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த விவகாரத்தில் விஜயை கைது செய்ய ஆளும் தரப்பு யோசித்து வருகிறது. ஆனால், விஜயை கைது செய்தால், அதுவே அவருக்கு ஆதரவான நிலையை ஏற்படுத்தி விடும் என்று திமுக தரப்புக்கு சிலர் ஆலோசனை வழங்கி உள்ளனர். இதனால் இந்த விஷயத்தில் அவசரப்படாமல், மக்கள் கருத்தறிந்து செயல்படலாம் என்று திமுக அரசு முடிவெடுத்தது. இதற்காக உளவுத்துறை முடுக்கிவிடப்பட்டது. மக்கள் கருத்தை அறிய உளவுத்துறைக்கு மொத்தம் 7 கேள்விகளை அரசு கொடுத்தது. 1.⁠ ⁠கரூரில் இறந்தவர்கள் வீடுகளுக்கு சென்று தவெகவினர் ஆறுதல் சொல்லாதது அக்கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? 2.⁠ ⁠பிரசார கூட்டத்துக்கு விஜய் தாமதமாக வந்தது சரியா? 3.⁠ ⁠கரூரில் பிரசார கூட்டத்துக்கு வந்திருந்தோருக்கு, குடிக்க தண்ணீர் கூட ஏற்பாடு செய்யாதது சரியா? 4.⁠ ⁠இப்படிப்பட்ட கூட்டங்களுக்கு அலை அலையாக மக்கள் சென்றது சரியானதா? 5.⁠ ⁠சம்பவத்துக்குப் பின் வீடியோ வெளியிட்ட நடிகர் விஜய், பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதலாக நாலு வார்த்தை பேசாதது சரியா? 6.⁠ ⁠முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியை, நடந்த சம்பவத்திற்கு தொடர்புப்படுத்துவது சரியா? 7.⁠ ⁠கரூரில் இறந்தோர் குடும்பத்துக்கு அரசு தரப்பில் இழப்பீடு அறிவிக்கப்பட்டது. அந்த அணுகுமுறை சரியா? ----- இந்த 7 கேள்விகளுடன் உளவுத்துறை ரிப்போர்ட் எடுக்க ஆரம்பித்தது. தமிழகம் முழுதும் சாலையோர வியாபாரிகள், விவசாயிகள், வணிகர்கள், பட்டதாரிகள், இளைஞர்கள், பெண்கள், கல்லுாரி மாணவ, மாணவியர், ஆட்டோ டிரைவர்கள், பஸ் பயணிகள் உள்ளிட்டோரிடம் 7 கேள்விகளுடன், உளவுத்துறை போலீசார், கருத்து கேட்டு தகவல் சேகரித்துள்ளனர். இதுபற்றி உளவுத்துறை போலீசார் கூறியது: கரூர் சம்பவம் குறித்து மக்களிடம் 7 கேள்விகள் கேட்கப்பட்டதில், கலவையாக கருத்துகள் வந்துள்ளன. கரூர் பிரசார கூட்டத்துக்கு போலீஸ் அதிகாரிகள், சரியான பாதுகாப்பு கொடுக்கவில்லை என்று பலர் சொன்னாலும், விஜயை இந்த விஷயத்தில் அரசு கைது செய்திருக்க வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக கூறி உள்ளனர். உளவுத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பை போலவே, தனியார் ஏஜென்சிகளும் மக்கள் கருத்தை எடுத்து அரசுக்கு அறிக்கை கொடுத்துள்ளனர் என்று உளவுத்துறை வட்டாரம் கூறியது. #KarurStampede #VijayToArrest #TVKvsDMK #KarurIssueUpdate #TVKVijayUpdate #TamilNaduNews #Politics2026 #DMK #TVK #KarurNews #BreakingNews #TamilPolitics #ElectionUpdates #VijayNews #PoliticalAnalysis #TamilUpdates #CurrentEvents #VijayArrest #TrendingTopics #SocialIssues

அக் 04, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Muthukumaran
அக் 04, 2025 18:48

விசாரணை கமிஷனே அமைக்காமல் அரசே தனக்குத்தோன்றியதை செய்திருக்கலாம் அவர்களுக்கு சாதகமாக கமிஷன் அறிக்கை கொடுக்கும் என நம்பிக்கை இழந்துவிட்டது போல் ஒரு தோற்றம் உருவாகிறது. நீதி மன்றம் வழக்கு தொடர்பான கருத்துக்களை கூறாமல் பிற விடயங்களைப் பேசுகிறது எனவும் பலர் ஊடகங்களில் பதிவிடுகிறிர்கள் இதன் முடிவு அரசுக்கு எவ்வித பயனையும் அளிக்கப்போவதில்லை என்றே செயல்பாடுகள் தோன்றுகிறது.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ