/ தினமலர் டிவி
/ பொது
/ தவெகவினர் பேரணியில் அலப்பறை: டென்ஷனான போலீஸ் இன்ஸ்பெக்டர் | TVK rally | Traffic issue | Police insp
தவெகவினர் பேரணியில் அலப்பறை: டென்ஷனான போலீஸ் இன்ஸ்பெக்டர் | TVK rally | Traffic issue | Police insp
திருவாரூர் வடக்கு மாவட்ட தவெக செயலாளராக அழகிரி காலனியை சேர்ந்த மதன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதை அவரது ஆதரவாளர்கள் திருவாரூர் நகரம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். திருவாரூர் மரணபாலத்தை சேர்ந்த ஆதிநாதன் ஏற்பாட்டில் ரவுண்டானா பகுதியில் உள்ள ஈவெரா சிலைக்கு மதன் மாலை அணிவித்தார். அங்கிருந்து 30க்கும் மேற்பட்ட பைக், கார்களில் தவெக தொண்டர்கள் கட்சி கொடியுடன் அனுமதியின்றி ஊர்வலமாக சென்றனர். தெற்கு வீதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் ஊர்வலத்தின்போது அதிக ஒலி எழுப்பியும், கூச்சலிட்டபடியும் சென்றதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
ஜூன் 12, 2025