திருப்பூரில் சம்பவம்: மக்கள் மறியலால் டிராபிக் ஜாம்
கேரள மாநிலம் திருச்சூர் வடக்கன்சேரி ஆத்துாரை சேர்ந்தவர் சுஜித் வயது 47. குடும்பத்தினருடன் காரில் பழநி நோக்கி சென்றார். திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பாலப்பம்பட்டி பஸ் ஸ்டாப் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து பயணிகள் நிழற் குடை மீது மோதியது. பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் ராஜகோபால், மோகன்ராஜ், ரங்கசாமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இன்னொரு பயணி சதாசிவம் படுகாயமடைந்தார். காரில் பயணித்த சுஜித், அவரது மனைவி 2 குழந்தைகள் உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு உடுமலை அரசு ஆஸ்பிடலில் அட்மிட் செய்தனர்.
செப் 13, 2024