இந்தியாவை வசைபாடிய டிரம்புக்கு குட்டு india vs us trade war | modi vs trump | uk pm starmer in india
அமெரிக்காவில் இறங்கும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரியை அந்த நாடு விதித்தது. இந்த வரியை விதிக்கும் போது, நம் நாட்டை பற்றி கடுமையாக வசைபாடி இருந்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப். உக்ரைனுடன் போரில் ஈடுபட்டுள்ள ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதால் தான் இந்தியாவுக்கு வரி போட்டு இருக்கிறோம் என்று சொன்ன டிரம்ப், ‛ரஷ்யாவுடன் சேர்ந்து இந்தியா என்ன செய்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. இரு நாட்டின் பொருளாதாரமும் செத்துவிட்டது. அதை அவர்கள் இன்னும் வலு இழக்க செய்வார்கள் என்று சாடினார். டிரம்ப் போட்ட அடாவடி வரிக்கு இந்தியா அடிபணியாது என்று நம் நாடு திட்டவட்டமாக சொல்லி விட்டது. இந்த நிலையில் இந்தியா வந்த பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர், அமெரிக்க அதிபர் டிரம்பின் கமென்ட்டுக்கு பதில் அளிக்கும் விதமாக பேசினார். செத்த பொருளாதாரம் என்று விமர்சித்த டிரம்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில், மிகச்சிறந்த பொருளாதாரம் என்று இந்திய பொருளாதாரத்தை பாராட்டினார். மோடியை சந்தித்த ஸ்டார்மர் கூறியது: இந்தியாவின் பொருளாதார மற்றும் நிதி தலைநகரான மும்பையில் நாம் சந்திப்பது மகிழச்சி. ஏனென்றால் இந்தியாவின் வளர்ச்சி கதை மிகவும் குறிப்பிடத் தகுந்தது. 2028ம் ஆண்டுக்குள் உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக மாறுவதை இலக்காக வைத்திருக்கும் பிரதமர் மோடியின் தலைமைக்கு நான் வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவை 2047ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாற்றும் விக்ஸித் பாரதம் என்ற தொலைநோக்கு திட்டம் வெற்றி அடைந்துள்ளது. நான் இங்கு வந்ததில் இருந்து பார்க்கும் அனைத்தும் நீங்கள் வெற்றி பாதையில் இருக்கிறீர்கள் என்பதை தெளிவாக காட்டுகிறது. இந்த வெற்றி பயணத்தில் நாங்களும் பங்காளிகளாக இருக்க ஆசைப்படுகிறோம். இந்தியா மற்றும் பிரிட்டனின் நலனுக்காக நமது வர்த்தக ஒப்பந்தத்தை அப்படியே இரட்டிப்பாக்குவதே எனது வருகையின் நோக்கம் என்று ஸ்டார்மர் கூறினார் #UKPM #DeadEconomy #IndiaVsUSTradeWar #IndiaUSTaxIssue #ModiVsTrump #TradeRelations #EconomicDebate #GlobalTrade #PoliticalCommentary #InternationalPolitics #Modi #Trump #UKPolitics #USIndiaRelations #EconomicImpact #TradePolicies #ViralVideo #CurrentEvents