உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் சப்ளையை நிறுத்தும் பிரிட்டன்

இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் சப்ளையை நிறுத்தும் பிரிட்டன்

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நடைபெற்று வருகிறது. இச்சூழலில் இஸ்ரேலுக்கு பிரிட்டன் ஏற்றுமதி செய்து வரும் ஆயுதங்களில் சிலவற்றை நிறுத்த முடிவு செய்துள்ளது. இஸ்ரேலுக்கு விற்கப்படும் 350 வகையான ஆயுதங்களின் உரிமங்களில் சுமார் 30ஐ தற்காலிகமாக நிறுத்த பிரிட்டன் முடிவு செய்துள்ளது. இது போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ட்ரோன்களுக்கான பாகங்கள் போன்ற உபகரணங்களாகும். பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டேவிட் லேமி கூறும்போது, இஸ்ரேலுக்கு அனுப்பப்படும் ஆயுதங்களை பயன்படுத்தி, அந்த நாடு சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறுதற்கான வாய்ப்பு உள்ளதால் இந்த முடிவை பிரிட்டன் எடுத்துள்ளது. இது ஆயுத தடைக்கு சமம் ஆனது இல்லை. பரிசீலனைதான் என்றார். பிரிட்டனின் முடிவை வெட்க கேடானது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு கண்டித்துள்ளார்.

செப் 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை