உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஐநாவில் பாகிஸ்தான் மூக்கை அறுத்த 4 நொடி சம்பவம் israel vs qatar | un watch hillel neuer vs pakistan

ஐநாவில் பாகிஸ்தான் மூக்கை அறுத்த 4 நொடி சம்பவம் israel vs qatar | un watch hillel neuer vs pakistan

காசாவில் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் தீவிர போரில் ஈடுபட்டுள்ளது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்காவும் கத்தாரும் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன. இஸ்ரேல் பிரதிநிதியாக அமெரிக்காவும், காசா பிரதிநிதியாக கத்தாரும் பேசுகின்றன. இந்த நிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு கத்தாரில் புகுந்த இஸ்ரேல் போர் விமானங்கள் ருத்ர தாண்டவமாடின. கத்தாரில் உள்ள ஹமாஸ் தலைமை அலுவலகம் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் சரமாரியாக குண்டு வீசின. ஹமாஸ் பயங்கரவாதிகள், அவர்களது பாதுகாவலர்கள் உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் உலக அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியது. இன்னொரு நாட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதால் இஸ்ரேலுக்கு பல நாடுகள் கண்டனமும் தெரிவித்தன. அதே நேரம் ஹமாஸ் பயங்கரவாதிகளை தான் குறி வைத்து அடித்தோம் என்று தாக்குதலை நியாயப்படுத்தியது இஸ்ரேல். இதற்கிடையே இந்த பிரச்னை தொடர்பாக விவாதிக்க ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் கூடியது. அதில் பேசிய கத்தார் பிரதிநிதி, இஸ்ரேல் தாக்குதலை கண்டித்தார். துருக்கி, பாகிஸ்தான், வெனிசுலா உள்ளிட்ட நாட்டின் பிரதிநிதிகளும் இஸ்ரேலை கடுமையாக சாடினர். ஐநா வாட்ச் (UN Watch) அமைப்பின் தலைவரும் சர்வதேச வழக்கறிஞருமான ஹில்லல் நியூயர், அதே கவுன்சில் கூட்டத்தில் பதிலடி கொடுத்தார். இஸ்ரேல் தாக்குதலை நியாயப்படுத்திய ஹில்லல், பாகிஸ்தான் மூக்கை அறுக்கும் விதமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் கூறியது: பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கும் நாடு கத்தார். அதன் தலைநகரில் உள்ள பயங்கரவாதிகள் இலக்கை தான் இஸ்ரேல் தாக்கியது. உள்ளே புகுந்து இஸ்ரேல் தாக்க கூடாது என்று கத்தார் நினைத்தால், எதற்காக பயங்கரவாதிகளுக்கு தலைநகரில் அடைக்கலம் கொடுக்க வேண்டும்? கத்தாரின் அல் ஜசீரா ஏன் ஹமாசின் இடைவிடாத பிரசார குழுவாக செயல்படுகிறது? பகலில் போரை நிறுத்தும் மத்தியஸ்தராக இருக்கிறீர்கள; இரவில் பயங்கரவாதிகள் ஆதரவாளர்களாக மாறி விடுகிறீர்கள்; இது ஏன்? அல் குவைதா தலைவன் ஒசாமா பின்லேடனை பாகிஸ்தானில் புகுந்து அமெரிக்கா கொன்றது. அப்போது, நீதி நிலைநாட்டப்பட்டது என்று ஐநா தலைவர் சொன்னார். அதை தானே இப்போது இஸ்ரேலும் செய்திருக்கிறது. இப்போது ஏன் மாற்றி பேசுகிறீர்கள் என்று ஹில்லல் கேள்வி எழுப்பினார். இதற்கிடையே பாகிஸ்தான் பிரதிநிதி குறுக்கிட்டார். ஹில்லல் பேச்சை சுட்டிக்காட்டி, ஐநா சாசானம், இறையாண்மை கொண்ட உறுப்பு நாட்டின் ஒருமைப்பாட்டை எந்த பிரதிநிதியும் மீறக்கூடாது. இதை ஐநா மனித உரிமை கவுன்சில் தலைவர் உறுதி செய்ய வேண்டும். எங்கள் மீதான ஆதாரமற்ற குற்றச்சாட்டை நிராகரிக்கிறோம் என்றார். அதை பதிவு செய்து கொண்ட கவுன்சில் தலைவர் மீண்டும் ஹில்லலுக்கு பேச வாய்ப்பு கொடுத்தார். ‛உங்களுக்கு இன்னும் 4 நொடிகள் தான் பேச நேரம் இருக்கிறது என்றார். வெறும் 4 நொடியில் ஒருவர் அப்படி என்ன பேசி விட முடியும். ஆனால் அந்த 4 நொடியில் பாகிஸ்தான் தலையில் இடியை இறக்கினார் ஹில்லல். ‛பயங்கரவாதிகளை ஆதரிக்கும் இன்னொரு நாடு பாகிஸ்தான் என்று தனக்கு கொடுத்த 4 நொடியில் பேசி முடித்தார். ஹில்லலின் பரபரப்பு பேச்சு இப்போது தீயாக பரவி வருகிறது. #IsraelVsQatar #HillelNeuer #Pakistan #UNHumanRightsCouncil #MiddleEastPolitics #HumanRights #InternationalRelations #DiplomaticDebate #GlobalPolitics #HumanRightsAdvocacy #FreePalestine #QatarRelations #UNDebate #HillelNeuerSpeaks #JusticeForAll #PoliticalDiscussion #MiddleEastConflict #HumanRightsWatch #WorldAffairs

செப் 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை