உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தேசியமும் தெய்வீகமும் தினமலரின் சித்தாந்தம்: அண்ணாமலை Ungalil Oruvan Book Release| Annamalai

தேசியமும் தெய்வீகமும் தினமலரின் சித்தாந்தம்: அண்ணாமலை Ungalil Oruvan Book Release| Annamalai

லோக்சபா தேர்தலுக்கு முன் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை என் மண்; என் மக்கள் என்ற பெயரில் மாநிலம் முழுதும் பாதயாத்திரை சென்றார். அது தொடர்பாக அவர் எழுதிய கட்டுரைகள் தினமலர் நாளிதழில் வெளியாகின. அந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, உங்களில் ஒருவன் என்ற பெயரில் தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் நூலாக வெளியிடப்பட்டுள்ளது. இதன் வெளியீட்டு விழா, சென்னை ராயப்பேட்டையில் உள்ள, தினமலர் நாளிதழ் அலுவலகத்தில் நடந்தது. நூலை, தினமலர் நாளிதழ் வெளியீட்டாளர் முனைவர் எல்.ராமசுப்பு வெளியிட, தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை மற்றும் தினமலர் நாளிதழ் வெளியீட்டாளர் எல்.ஆதிமூலம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். விழாவில், தினமலர் நாளிதழ் இணை ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, இணை இயக்குனர்கள் ஆ.லட்சுமிபதி, ஆர்.சீனிவாசன், அண்ணாமலையின் தனிச்செயலர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆக 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி