மோடியை புகழ்ந்த மறுகணம் முஸ்லிம் பெண்ணுக்கு முத்தலாக் | UP Triple Talaq issue | Modi | Bahraich UP
அயோத்தியை பிரமாதமாக மாற்றி விட்டார்கள் என்று பிரதமர் மோடி, உத்தரப்பிரதேசம் முதல்வர் யோகியை வியப்புடன் பாராட்டிய முஸ்லிம் பெண்ணை, அவரது கணவர் முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த பெண் பெயர் மரியம். உத்தரப்பிரதேசத்தின் மொகல்லா சாராய் பகுதியை சேர்ந்தவர். கடந்த ஆண்டு டிசம்பரில் தான் அவருக்கு திருமணம் ஆனது. அயோத்தியின் கோட்வாலி நகர் பகுதியை சேர்ந்த அர்ஷத் என்பவரை திருமணம் செய்தார். கணவன் வீட்டுக்க வந்ததும் அவருக்கு நிறைய ஆச்சர்யங்கள். அயோத்தியை பார்த்து வியந்தார். இது பற்றி ஒருமுறை தனது கணவன் அர்ஷத்திடம் சொன்னார். அயோத்தி மிகவும் அழகாக இருக்கிறது. பிரதமர் மோடியும், முதல்வர் யோகியும் நகரை மேம்படுத்தி விட்டனர் என்றார். உடனே அர்ஷத் ஆத்திரப்பட்டார். மோடி, யோகியை புகழ்ந்ததால் எரிச்சல் அடைந்தார். குடும்பத்தினருடன் சேர்ந்து மரியமை தாக்கினார். சூடான பருப்பு வேகவைத்த தண்ணீரை மனைவி மீது ஊற்றினார். பின்னர் மூன்று முறை தலாக் செய்து தனது மனைவியை விவாகரத்து செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மரியம் போலீசில் புகார் செய்தார். அவரது கணவன் அர்ஷத், மாமா இஸ்லாம், மாமியார் ராயிஷா, கணவனின் சகோதரிகள் உட்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.