உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விடாமுயற்சியுடன் ஐபிஎஸ் தேர்வில் சாதித்த கிராமத்து இளைஞன்! UPSC Exam | Lorry Driver Son | Salem

விடாமுயற்சியுடன் ஐபிஎஸ் தேர்வில் சாதித்த கிராமத்து இளைஞன்! UPSC Exam | Lorry Driver Son | Salem

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஏத்தாப்பூரை சேர்ந்தவர் அறிவழகன். லாரி டிரைவர். இவரது மனைவி கலைவாணி. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் கார்த்திகேயன், சிறு வயது முதல் ஐபிஎஸ் ஆக வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டு படித்து வந்துள்ளார். குடும்ப சூழல் காரணமாக பட்டப்படிப்பு முடித்தவுடன் ஐடி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அப்போதும் தனது கனவை கைவிடாமல் பயிற்சி மையத்தில் சேர்ந்து யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வந்தார். முதற்கட்டமாக தேர்வு எழுதியதில் ரயில்வே அதிகாரியாக பணி கிடைத்தது. பணி புரிந்து கொண்டு விடாமுயற்சியுடன் படித்து வந்து இந்த ஆண்டு ஐபிஎஸ் கனவை நனவாக்கி உள்ளார். ஐபிஎஸ் பாஸான அவர் அடுத்த மாதம் ஐதராபாத்துக்கு பயிற்சிக்கு செல்ல உள்ளார்.

நவ 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை