சீனாவை அடிக்கும் நேட்டோ! US பெரிய ஸ்கெட்ச் | US India trade war | US vs China | NATO | Trump tariff
ரஷ்யா, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர சீனாவுக்கு 100 சதவீதம் வரி விதிக்க வேண்டும் என்று நேட்டோ நாடுகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது அறிக்கை: ரஷ்யா மீது பெரிய தடைகளை விதிக்க அமெரிக்கா தயாராக உள்ளது. ஆனால் நேட்டோ அமைப்பின் அனைத்து நாடுகளும் இதை செய்ய வேண்டும். அதே போல் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால் மட்டுமே இது சாத்தியமாகும். வெற்றிக்கான நேட்டோவின் அர்ப்பணிப்பு, 100 சதவீதத்துக்கும் மிகக்குறைவாக உள்ளது. இன்னமும் சிலர், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவது அதிர்ச்சியளிக்கிறது. இது, ரஷ்யாவை கட்டுப்படுத்தும் சக்தியையும் பெரிதும் பலவீனப்படுத்துகிறது. நேட்டோ நாடுகள் குழுவாக இணைந்து, ரஷ்யா - உக்ரைன் மோதல் முடியும் வரை, சீனா மீது 50 முதல் 100 சதவீதம் வரை வரி விதிக்க வேண்டும். இது, ரஷ்யா உடனான சீனாவின் வலுவான பிடியை உடைக்க உதவும். போர் முடிவுக்கு வந்த பின், இந்த வரி விதிப்பு முழுமையாக திரும்ப பெற வேண்டும். சீனா மீது விதிக்கப்படும் இந்த கடுமையான வரி விதிப்பு, கொடிய மற்றும் ஆபத்தான போரை முடிவுக்கு கொண்டு வருவதில் பெரிதும் உதவியாக இருக்கும் டிரம்ப் கூறி இருந்தார். டிரம்ப் வெளியிட்ட இந்த அறிக்கை சர்வதேச அரசியலில் புதிய புயலை கிளப்பி உள்ளது. சீனா கோபத்தின் உச்சிக்கே போய்விட்டது. டிரம்புக்கு பதிலடி கொடுத்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ கூறியது: போர் என்பது பிரச்சனைக்கு தீர்வு அல்ல. அதேபோல் தடைகள் விதிப்பது பிரச்சனையை இன்னும் சிக்கலாக தான் மாற்றும். சீனா எந்த போரிலும் பங்கேற்கவில்லை. போர் தொடர்பான சதிகளிலும் ஈடுபடவில்லை என்று கூறினார். அதாவது, அமெரிக்கா தான் தேவையின்றி போர்களில் தலையிடுகிறது என்று சீனா சாடி உள்ளது. #ChinaVsUS #NATO #TrumpVsChina #USA #Trump #NATO #Sanctions #Russia #Oil #EnergyPolitics #InternationalRelations #Geopolitics #ChinaUSRelations #EconomicSanctions #TradeWar #GlobalEconomy #Moscow #PoliticalDrama #ForeignPolicy #EnergySecurity #Diplomacy #WorldNews