அமெரிக்கா முகத்திரை கிழித்த ஜெய்சங்கர் US vs India | Jaishankar on US Pakistan relationship | osama
அமெரிக்க அதிபராக 2வது முறை பதவி ஏற்ற டிரம்ப், முன்பு இந்தியாவிடம் காட்டிய அதே நெருக்கத்தை இப்போது பாகிஸ்தானிடம் காட்டி வருகிறார். பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து வெடித்த இந்தியா, பாகிஸ்தான் போரில் கூட, அமெரிக்காவின் செயல்பாடுகள் பாகிஸ்தானை ஆதரிப்பது போலவே இருந்தன. போருக்கு பிறகு அமெரிக்காவின் சாயம் வெளுத்துப்போனது. பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீரை வெள்ளை மாளிகைக்கு வரவழைத்து மதிய விருந்து கொடுத்து உபசரித்தார் டிரம்ப். அதன் பிறகு மீண்டும் அமெரிக்கா சென்ற முனீர், அங்குள்ள பாகிஸ்தானியர்கள் முன்பு வீராவேசமாக பேசினார். இந்தியாவுக்கு பகிரங்கமாக அணு ஆயுத மிரட்டல் விடுத்தார். அமெரிக்க மண்ணில் இப்படி ஒரு சம்பவம் நடப்பது அதிர்ச்சியாக இருந்தது. ஆனாலும் பாகிஸ்தான் மற்றும் முனீரை கொண்டாடி தீர்க்கிறார் டிரம்ப். அமெரிக்கா இப்படி பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வருவது பற்றி நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஜெய்சங்கர், தனக்கே உரிய பாணியில் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் முகத்திரையை கிழித்தார். அவர் கூறியது: