அமெரிக்காவை அடிக்க ஈரான் ரெடி? பரபரப்பு பின்னணி | US vs Iran | Trump vs iran | iranian drone gaza
மத்திய கிழக்கில் எலியும் பூனையுமாக இருக்கும் நாடுகள் ஈரான்-இஸ்ரேல். காசாவில் இருந்து ஹமாஸ், லெபனானில் இருந்து ஹெஸ்புலா, ஏமனில் இருந்து ஹவுதி என ஒரே நேரத்தில் மூன்று பயங்கரவாதிகளுடன் இஸ்ரேல் மல்லுக்கட்டி வருகிறது. இந்த மூன்று பயங்கரவாத அமைப்புகளையும் பின்னால் இருந்து இயக்குவது ஈரான். ஒரு வழியாக 13 மாதங்கள் கழித்து இஸ்ரேல்-ஹெஸ்புலா போரும், 15 மாதங்கள் கழித்து இஸ்ரேல்-ஹமாஸ் போரும் முடிவுக்கு வந்து விட்டன. இந்த போரில் கிட்டத்தட்ட 47 ஆயிரம் பேர் காசாவிலும், லெபனானிலும் கொல்லப்பட்டு இருக்கின்றனர். இனிமேலாவது மத்திய கிழக்கில் அமைதி திரும்பும் என்று உலக நாடுகள் எதிர்பார்த்த நிலையில், அதற்கு வாய்ப்பே இல்லை என்கிறது ஈரானின் செயல்பாடு. இதற்கு இரண்டு முக்கிய காரணம். ஒன்று இஸ்ரேல். மற்றொன்று டிரம்ப் வருகை. இஸ்ரேலிடம் ஈரான் தீர்க்க வேண்டிய ஒரு பாக்கி உள்ளது. ஹமாஸ், ஹெஸ்புலா போரின் ஒரு பகுதியாக கடந்த ஏப்ரல் மாதம் இஸ்ரேல் மீது ஈரானும் ஏவுகணைகளை வீசியது.