/ தினமலர் டிவி
/ பொது
/ அமெரிக்காவில் இருந்து வெளியேறும் சட்ட விரோத குடியேறிகளுக்கு ஊக்கத்தொகை: டிரம்ப் அறிவிப்பு USA Anno
அமெரிக்காவில் இருந்து வெளியேறும் சட்ட விரோத குடியேறிகளுக்கு ஊக்கத்தொகை: டிரம்ப் அறிவிப்பு USA Anno
உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்தோர் வேலை, தொழில், கல்வி, மருத்துவம், சுற்றுலா என பல்வேறு காரணங்களுக்காக விசா பெற்று அமெரிக்கா செல்கின்றனர். வேலை, தொழில், கல்விக்காக செல்வாேரில் பலர் விசா காலம் முடிந்தும் சட்ட விரோதமாக அமெரிக்காவில் தங்கியுள்ளனர். சட்ட விரோக குடியேறிகளை கண்டறிந்து அவர்களை வெளியேற்றும் நடடிக்கையில் அதிபர் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு தீவிரம் காட்டி வருகிறது. பிடிபடும் நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் நாடு கடத்தப்படுகின்றனர். சட்ட விரோத குடியேறிகளை அமெரிக்கா நடத்தும் விதம் குறித்து பல்வேறு நாடுகளும் பல வகைகளில் கருத்து தெரிவித்துள்ளன. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
டிச 24, 2025