உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஈரானை மிரட்டும் அமெரிக்காவின் அரக்கத்தனமான ஆயுதம் | Israel vs Iran | US vs Iran | B-52 Bomber

ஈரானை மிரட்டும் அமெரிக்காவின் அரக்கத்தனமான ஆயுதம் | Israel vs Iran | US vs Iran | B-52 Bomber

ஈரான் ஆதரவுடன் காசாவில் செயல்படும் ஹமாஸ், லெபனானில் இயங்கும் ஹெஸ்புலா பயங்கரவாத அமைப்புகளுடன் இஸ்ரேல் தீவிர போரில் ஈடுபட்டுள்ளது. போரில் 2 பங்கரவாத அமைப்புகளின் உச்ச தலைவர்களையும் இஸ்ரேல் கொன்றது. இதனால் இஸ்ரேல் மீது அக்டோபர் 1ம் தேதி ஈரான் கொடூர தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுத்த இஸ்ரேல் அக்டோபர் 26ம் தேதி ஈரானில் புகுந்து தாண்டவம் ஆடியது. இதற்கு பதிலடி கொடுப்போம் என்று ஈரான் அறிவித்து இருப்பதால், நேரடியாகவே இஸ்ரேல், ஈரான் போர் வெடிக்கும் அபாயம் நிலவுகிறது. இஸ்ரேல் மறக்கவே முடியாத அளவு தாக்குதலை நடத்த வேண்டும் என்று ஈரான் நாட்டின் உச்ச தலைவர் கமேனி கூறி உள்ளார். எந்த நேரத்திலும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்கும் அபாயம் நிலவி வருகிறது. இதை சமாளிக்க இஸ்ரேலும் முழு வீச்சில் களம் இறங்கி உள்ளது. ஈரான் மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் ஈடுபடக்கூடும் என்று இஸ்ரேல் கருதுகிறது. இதனால் அவற்றை இடைமறித்து அழிக்கும் வான்வழி பாதுகாப்பு கவசங்களான அயன்டோம், டேவிட் ஸ்லிங், ஆரோ சிஸ்டத்தை இஸ்ரேல் முழு வீச்சில் தயாராக்கி வைத்துள்ளது. இது தவிர அமெரிக்காவும் இஸ்ரேலுக்கு பெரிய அளவில் உதவிகளை செய்து வருகிறது. ஈரான் இஸ்ரேலை தாக்கக்கூடும் என்ற அபாயம் எழுந்ததுமே தன்னிடம் இருக்கும் சக்தி வாய்ந்த தாட் ஏவுகணை தடுப்பு சிஸ்டத்தை இஸ்ரேலுக்கு வழங்கியது. இஸ்ரேலில் உள்ள அயன்டோம் போன்ற பாதுகாப்பு கவசங்களுடன் தாட் சிஸ்டமும் இப்போது நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அக்டோபர் 1 தாக்குதலின் போது இஸ்ரேலின் ராணுவ தளங்களை குறிவைத்து 200 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஈரான் வீசி இருந்தது. இந்த முறை தினமும் ஈரான் உச்ச தலைவர் கமெனி உட்பட பல தலைவர்கள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்து வருகின்றனர். போன சம்பவத்தை விட இந்த முறை ஈரான் தாக்குதல் சற்று பலமாக இருக்க கூடும் என்று அமெரிக்காவும் இஸ்ரேலும் கணித்துள்ளன. இதையடுத்து தன்னிடம் உள்ள முக்கியமான பல ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அமெரிக்கா கொடுத்து வருகிறது. ஈரானை மிரட்டும் விதமாக போர் கப்பல்கள், போர் விமானங்களையும் மத்திய கிழக்கு நோக்கி அமெரிக்கா அனுப்பி வைத்தது. அனைத்தும் இப்போது அமெரிக்காவின் பொறுப்பு பகுதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.

நவ 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை