உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / புதைந்தவர்களை தேடும் பணியில் ஹெலிகாப்டர், ட்ரோன்கள் Uttarakhand Avalanche | 4 dead in Avalanche | P

புதைந்தவர்களை தேடும் பணியில் ஹெலிகாப்டர், ட்ரோன்கள் Uttarakhand Avalanche | 4 dead in Avalanche | P

உத்தராகண்ட்டின் சமோலி மாவட்டம் மனா பகுதியில் நேற்று திடீரென பனிப்புயல் வீசியது. அப்போது ஏற்பட்ட பனிச்சரிவில், சாலை பணியாளர்கள் 55 பேர் பனிக்குவியலில் புதைந்தனர். பேரிடர் மீட்பு படை, இந்தோ - திபெத் போலீஸ் படை, உள்ளூர் போலீசார், ராணுவம், துணை ராணுவம் என பல்வேறு படையினரும் மீட்பு பணியில் களம் இறங்கினர். மோசமான வானிலை காரணமாக நேற்று அப்பகுதியில் ஹெலிகாப்டர் தரையிறங்க முடியவில்லை. மாலைக்குள் 33 பேர் மீட்கப்பட்டனர். இரவு ஆனதால் மீட்பு பணியில் சுணக்கம் ஏற்பட்டது. இன்று காலை மீட்பு பணி தொடர்ந்தது. ராணுவ ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டு, பனியில் புதைந்த மேலும் 17 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஹெலிகாப்டர் மூலம் ஜோஷிமத் ராணுவ ஆஸ்பிடலுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்களில் பலத்த காயமடைந்திருந்த 4 பேர் இறந்ததாக ராணுவ அதிகாரி மணீஷ் ஸ்ரீவத்சவா தெரிவித்தார். மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளவர்களை முதல்வர் புஷ்கர் சிங் தாமி சந்தித்து நலம் விசாரித்தார்.

மார் 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ