உத்தராகண்ட்டில் ரெட் அலர்ட்: கரையோரங்களில் கண்காணிப்பு தீவிரம் Heavy Rain at Uttarakhand
உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக், உத்தரகாசி, டேராடூன், கங்கோத்ரி, யமுனோத்ரி, ஹரித்துவார், டிக்ரி, பவுரி, நைனிதால், சம்பாவத் ஆகிய இடங்களில் 29, 30ம் தேதிகளில் அதிதீவிர கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. உத்தரகாசியில் மேகவெடிப்பு ஏற்பட்டதால், குறுகிய நேரத்தில் அதீத கனமழை கொட்டியது. கட்டட தொழிலாளர்கள் தங்கியிருந்த இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. கட்டடங்கள் சரிந்து விழுந்து புதைந்தன. வெள்ளத்தில் சிக்கிய 29 தொழிலாளர்களில் 20 பேர் மீட்கப்பட்டனர். வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 9 பேரை தேடும் பணியில் தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையின் ஈடுபட்டனர். 18 கிமீ தொலைவில் இருவரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் 7 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கனமழை தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், கண்காணிப்பு, மீட்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.