பேய் மழையின் பிடியில் சிக்கிய கோர சம்பவம் | Vietnam Bridge Collapses | Vietnam Rain
அலறல் ஓலம் கேட்கிறது.. கண்முன்னே காணாமல் போகும் பாலம் 2 துண்டாக உடைந்து சிதறும் காட்சிகள்! டிஸ்க்: பிலிப்பைன்சில் உருவான யாகி புயல் சீனா, வியட்நாமை தாக்கி பேரழிவை உண்டாக்கி உள்ளது. வடக்கு வியட்நாமின் குவாங் நின், ஹைடாங் மற்றும் ஹோ பின் மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 149 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய காற்றால் கட்டிடங்கள், வாகனங்கள் புரட்டிப்போடப்பட்டது. வீதியில் நடந்து சென்ற மக்கள் காற்றின் வேகத்தால் நடக்க முடியாமல் தடுமாறி ரோட்டில் விழுந்தனர். யாகி புயல் கரையை கடக்கும் நேரத்தில் வியட்நாமில் கனமழை கொட்டியது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி 64 பேர் இறந்துள்ளனர். இந்த நிலையில் ஹேங் ஆற்றில் மீது கட்டப்பட்ட பாலம் ஒன்று இரண்டு துண்டாக உடைந்து ஆற்றில் மூழ்கியது. இதில் ஒரு பஸ், 10 கார்கள், ஒரு டிரக் லாரி, சில டூவீலர்கள் ஆற்றுக்குள் விழுந்து அப்படியே மூழ்கின. பஸ்சில் பயணித்த 20 பேரும் ஆற்றில் மூழ்கி இறந்தனர். மீட்பு படையினர் பஸ் பயணிகளின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.