கையும் களவுமாக சிக்கியதும் கெஞ்சிய அதிகாரிகள் | Vigilance | Anti-Corruption | Ramanathapuram
சிக்கியது மொத்தமும் ₹500 கட்டுகள் கைரேகை எடுக்க சொன்ன அதிகாரி ராமநாதபுரம் நெடுஞ்சாலை துறை உதவி கோட்டப் பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் திடீரென சோதனை நடத்தினர். அப்போது, கணக்கில் வராத பணம் 5 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் சிக்கியது. இது தொடர்பாக அலுவலர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. எங்களுக்கும் பணத்துக்கும் சம்பந்தம் இல்லை. அதிகாரிகள் வெளியே சென்ற நேரத்தில் யாராவது கொண்டு வந்து வைத்திருக்கலாம். எங்களை சிக்க வைக்க வேண்டும் என சதி நடந்துள்ளது. கைரேகை சோதனை பண்ணுங்க என அங்கிருந்த அதிகாரி ஒருவர் கோரிக்கை வைத்தார். ராமநாதபுரத்தை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத 3 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. மாவட்ட பதிவாளர் சதாசிவம், புதுக்கோட்டை சார் பதிவாளர் செல்வகுமார் ஆகியோரிடம் விசாரணை நடக்கிறது.