உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விஜய் முடிவால் ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள்! | Viaji | Actor Vijai | TVK | Vijai Political Entry

விஜய் முடிவால் ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள்! | Viaji | Actor Vijai | TVK | Vijai Political Entry

சினிமாவுக்கு விடை கொடுத்து முழு நேர அரசியலில் இறங்க போவதாக நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து உள்ளார். அவர் துவங்கி உள்ள தவெக கட்சியின் முதல் மாநாடு அக்டோபர் 27ல் நடக்க உள்ளது. இன்று அதிகாலையில் மாநாட்டிற்கான பந்தல் கால் நடும் நிகழ்வு நடந்தது. விழுப்புரம் விக்கிரவாண்டியில் பிரம்ம முகூர்த்தத்தில் யாகம் வளர்த்து அக்கட்சியின் பொதுச்செயலர் ஆனந்த் தலைமையில் பந்தல் கால் நட்டினர். அரசியலில் முதல்படியாக பார்க்கப்படும் முதல் மாநில மாநாட்டுக்கான பந்தல்கால் நடும் விழாவுக்கு விஜய் வரவில்லை. அவரது வரவேற்பை எதிர்பார்த்து காத்து இருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

அக் 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை