தெப்பக்காடு யானைகள் முகாமில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம்! Vinayagar Chathurthi | Mudumalai | Theppa
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமில், ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தெப்பக்காடு முகாமில் முதுமலை துணை இயக்குநர் வித்யா தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடந்தது. வளர்ப்பு யானைகள் அலங்கரிக்கப்பட்டு, விநாயகர் கோயில் முன் வரிசையாக நிறுத்தப்பட்டன. விநாயகர் கோயிலில், பழங்குடியினர் தங்கள் பாரம்பரிய முறைப்படி பூஜை செய்தனர். தொடர்ந்து வளர்ப்பு யானை கிருஷ்ணா, மணி அடித்தபடி கோயிலை சுற்றி வந்து பூஜை செய்து, விநாயகரை வணங்கியது. இந்நிகழ்வு, சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. வளர்ப்பு யானைகளுக்கு வழக்கமாக வழங்கப்படும் உணவுகளுடன் பழங்கள், பொங்கல் வழங்கப்பட்டது. யானைகள் முகாம் விநாயகர் சதுர்த்தியை டூரிஸ்ட்கள் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.