லாரி டிரைவர் அலட்சியம்: விருதுநகரில் பயங்கர விபத்து | Road accident
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு மதுரைக்கு ஒரு லாரி நள்ளிரவில் புறப்பட்டது. விருதுநகர் அக்ரகாரப்பட்டி பாலம் அருகே லாரி, டீசல் இல்லாமல் நின்றது. நடுரோட்டில் நின்ற லாரி மீது அதிகாலை 2.45 மணியளவில் அடுத்தடுத்து 2 வாகனங்கள் மோதின. ஒரு மினி வேனை முந்திச் செல்ல முயன்ற பைக், நின்றிருந்த லாரி மீது முதலில் மோதியது. அதில் பயணித்த இருவர் கீழே விழுந்த நிலையில், அடுத்த ஓரிரு நொடிகளில் மினி வேனும் லாரியின் பின்புறத்தில் மோதியது.
பிப் 12, 2025