உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பட்டாசு ஆலை விபத்துக்கான காரணம் இது தான்! | Virudhunagar | Cracker| Cracker Factory

பட்டாசு ஆலை விபத்துக்கான காரணம் இது தான்! | Virudhunagar | Cracker| Cracker Factory

விருதுநகர் அருகே உள்ள கட்டனார்பட்டியில் வனஜா பட்டாசு ஆலை இயங்கி வந்தது. இன்று மதியும் இங்கு பட்டாசு தயாரிப்பின் போது திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 23 பேர் இறந்தனர். 6 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டனர். விசாரணையில் கோவிந்தநல்லூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் முத்துமாணிக்கத்துக்கு சொந்தமான ஆலை என தெரியவந்தது. விடுமுறை நாளான இன்று விதியை மீறி பட்டாசு தயாரித்துள்ளனர். கிட்டத்தட்ட 35 பேர் விபத்து நடந்த போது இருந்துள்ளனர். மீட்பு பனியின் போதே உள்ளே இத்தனை பேர் சிக்கி இருந்தது தெரிந்தது. அடுத்தடுத்து சடலங்கள் மீட்கப்பட்டு அப்பகுதியே சோகத்தில் மூழ்கியது. மாலை 6 மணி அளவில் மீட்பு பணி ஓரளவு முடிந்து தீ முழுதும் அணைக்கப்பட்டு இருந்தது. 7 மணிக்கு ஜேசிபி மூலம் இடர்பாடுகளை அகற்றி கொண்டு இருந்தனர். அப்போது உராய்வினால் மீண்டும் தீப்பற்றி பட்டாசு மூலப்பொருட்கள் வெடித்தது. இதில் 5 தீயணைப்புத் துறையினர் 4 போலீசார் உள்ளிட்ட 13 பேர் காயமடைந்தனர். நல்வாய்ப்பாக கலெக்டர் சுகபுத்ரா மற்றும் எஸ்.பி., ஸ்ரீநாதா காயமின்றி தப்பினர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டனர். #Virudhunagar | #Cracker| #CrackerFactory | #VirudhunagarFactory | #VirudhunagarCracker

ஏப் 19, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை