/ தினமலர் டிவி
/ பொது
/ சுவர் இடிந்து மண்ணில் உயிருடன் புதைந்த தொழிலாளர்கள் | Wall collapsed | Private company | Kadi | Meh
சுவர் இடிந்து மண்ணில் உயிருடன் புதைந்த தொழிலாளர்கள் | Wall collapsed | Private company | Kadi | Meh
குஜராத்தின் மெஹ்சானா மாவட்ட தலைநகரில் இருந்து சுமார் 37 கி.மீ. தொலைவில் உள்ள காடி நகருக்கு அருகே உள்ளது ஜசல்பூர் கிராமம். இங்குள்ள தனியார் தொழிற்சாலையில் நிலத்துக்கு அடியில் தொட்டி அமைக்க தொழிலாளர்கள் சிலர் பள்ளம் தோண்டிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென பக்கவாட்டு மண் சுவர் இடிந்ததில் பள்ளம் தோண்டிய தொழிலாளர்கள் உயிருடன் மண்ணுக்குள் புதைந்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மாவட்ட வளர்ச்சி அதிகாரி ஹஸ்ரத் ஜாஸ்மின் தலைமையில் நடந்த மீட்பு பணியில், 7 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.
அக் 12, 2024