சட்டமாகும் வக்ப் மசோதா; உற்சாக வெள்ளத்தில் முஸ்லிம்கள் Muslim community celebrating Waqf Amendmen
ஏழைகளின் நலன் காக்க முஸ்லிம்கள் எழுதி வைக்கும் சொத்துக்களை நிர்வகிக்கும் அமைப்புதான் வக்ப் வாரியம். இதில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்ததால், வக்ப் வாரிய சட்டத்தில் சில திருத்தங்களை மத்திய அரசு செய்தது. வக்ப் சட்ட திருத்த மசோதாவை லோக்சபாவில் நேற்று முன்தினம் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார். 12 மணி நேர காரசார விவாதத்துக்கு பிறகு வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 288 எம்.பிக்கள், எதிராக 232 எம்பிக்கள் ஓட்டளித்தனர். நேற்று ராஜ்யசபாவில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. 13 மணி நேர விவாதத்துக்கு பிறகு இன்று அதிகாலையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. ராஜ்யசபாவில் மசோதாவுக்கு ஆதரவாக 128 எம்பிக்களும், எதிராக 95 எம்பிக்களும் ஓட்டளித்தனர்