உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தகவல் பின்னாடி வரும்: மத்திய அரசின் பரபர ரிப்போர்ட் | Warning For Media | IB | India Pakistan

தகவல் பின்னாடி வரும்: மத்திய அரசின் பரபர ரிப்போர்ட் | Warning For Media | IB | India Pakistan

காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் இறந்தனர. தாக்குதலில் தொடர்புடையோருக்கு கற்பனைக்கு எட்டாத வகையில் கடுமையான தண்டனை வழங்கப்படும் என பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு, கண்காணிப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அக்ரன் என்ற பெயரில் இந்திய விமானப் படை சிறப்பு போர் ஒத்திகையை நடத்தி வருகிறது. இதில் ரபேல் போர் விமானங்கள் பங்கேற்றுள்ளன. ஐஎன்எஸ் சூரத் போர்க்கப்பலில் இருந்து அண்மையில் பிரம்மோஸ் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் பெருமளவில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். காஷ்மீர் முழுவதும் தீவிரவாதிகள் வேட்டையாடப்பட்டு வருகின்றனர். இப்போது என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமையும் களத்தில் இறங்கி சோதனை நடத்தி வருகிறது. பதற்றமான இந்த சூழலில் இந்தியாவின் நகர்வுகள் பற்றி பயங்கரவாதிகள் ஊடகங்கள் மூலம் தெரிந்து கொள்கின்றனர். ஏற்கனவே பல முறை இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதலின் போது மீடியாக்கள் மூலம் சில ரகசியங்கள் வெளியில் கசிந்தது. இந்த முறை அதுபோன்ற தவறு நடக்க கூடாது என்பதில் உறுதியாக உள்ள மத்திய அரசு ஊடகங்களுக்கு சில அறிவுரைகளை வெளியிட்டுள்ளது. நாட்டின் நலன் கருதி, அனைத்து மீடியாக்கள், செய்தி ஏஜென்சிகள் மற்றும் சமூக வலைதளங்கள் அனைத்தும் நாட்டின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு சார்ந்த நடவடிக்கைகள் குறித்து செய்தி வெளியிடும் போது, பொறுப்புடனும் மற்றும் தற்போதுள்ள சட்டம் மற்றும் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். பாதுகாப்பு நடவடிக்கைகள் அல்லது செயல்பாடு தொடர்பாக, Sources-based தகவல்கள் அடிப்படையாக கொண்டு நேரடி ஒளிபரப்பு செய்வதோ, காட்சிபடுத்துதல் அல்லது செய்தி வெளியிடக்கூடாது. முன்கூட்டியே தகவல்களை வெளியிடுவது என்பது, எதிரிகளுக்கு உதவக்கூடும். கார்கில் போர், மும்பை பயங்கரவாத தாக்குதல், காந்தகாருக்கு விமானம் கடத்தலின் போது, கட்டுப்பாடு இல்லாமல் செய்தியாக்கப்பட்டது. அது நாட்டு நலன்கள் மீது எதிர்பாராத விதமான பாதக விளைவுகளை ஏற்படுத்தியது. நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில், மீடியாக்கள், டிஜிட்டல் தளங்கள் மற்றும் தனி நபர்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். சட்டப்பூர்வ கடமைகளை தவிர, நமது கூட்டு நடவடிக்கைகள் தொடர்ச்சியான செயல்பாடுகளையோ அல்லது நமது பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பையோ சமரசம் செய்யப்படாமல் இருக்க செய்வது நமது கடமை. பயங்கரவாதிகளுக்கு எதிரான பாதுகாப்பு படையினரின் நடவடிக்கையை நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடாது என ஏற்கனவே மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. அதனை மீறி செயல்படுவது நடவடிக்கை எடுக்க வகை செய்யும். எனவே, பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு படையினரின் செயல்பாடுகளை, நாட்டின் நலன் கருதி மீடியாக்கள் நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடாது. அத்தகைய நடவடிக்கைகள் முடிந்தவுடன், அரசு நியமிக்கும் அதிகாரி விளக்கம் அளிப்பார். சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் கவனமுடனும், பொறுப்புடனும் செய்தி வெளியிட வேண்டும் என மத்திய அரசின் சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

ஏப் 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை