கட்சியினர் கண்ட்ரோலில் கனவு இல்லம் திட்டம் | Kalaignarin Kanavu Illam | DMK
குடிசையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் கடந்த 2024ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. கிராம புறங்களில் குடிசை மற்றும் ஓட்டு வீடுகளில் வசிக்கும் மக்கள், 360 சதுர அடி பரப்பளவில் கான்கிரீட் வீடு கட்டுவதற்காக 3.50 லட்சம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது. குறிப்பாக, இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு சொந்தமாக வீட்டு மனை இல்லையென்றால், அரசாங்கமே வீட்டுமனையை இலவசமாக வழங்கும் என்பது தனி சிறப்பு. இதில் பயனடைய விரும்பும் பயனாளிகள், தங்களது ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
மே 16, 2025