/ தினமலர் டிவி
/ பொது
/ ஒரே இடத்தில் 67 உடல்கள் அடக்கம் ; வயநாட்டின் மீளாத சோகம் | Wayanad | Kerala Land Slide | Wayanad lan
ஒரே இடத்தில் 67 உடல்கள் அடக்கம் ; வயநாட்டின் மீளாத சோகம் | Wayanad | Kerala Land Slide | Wayanad lan
கேரளா வயநாட்டில் நடந்த நிலச்சரிவு சம்பவம் மாநிலத்தையே உலுக்கி போட்டுள்ளது. 6 நாட்களாகியும் மீட்பு பணி முடியவில்லை. தோண்ட தோண்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 350ஐ கடந்துள்ளது. சோக சம்பவமாக அடையாளம் தெரியாத 67 பேரின் உடல்கள் மற்றும் கிடைத்த உடல் பாகங்கள் இன்று அரசு சார்பில் அடக்கம் செய்யப்பட்டன. இதில் 27 முழு உடல்களும், 40 உடல் பாகங்களும் அடங்கும். கேரளாவின் புத்துமலை பகுதியில் மும்மத பிரார்த்தனையுடன் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்ட காட்சிகள் காண்போர் கண்களை குளமாக்கியது.
ஆக 04, 2024