கேரள நிலச்சரிவுக்கு காரணமே இதுதான் | wayanad landslide explained | chooralmala | Mundakai | Kerala
கொத்து கொத்தா மக்கள் மரணம் உறக்கத்திலேயே பிரிந்த உயிர் பேய் மழையின் கோர முகம் மொத்த நாட்டையும் உலுக்கி இருக்கிறது கேரளாவின் வயநாடு நிலச்சரிவு. இந்த துயரச் செய்தியுடன் தான் கேரளாவுக்கு இன்றைய விடியல் இருந்தது. நிலச்சரிவில் சிக்கி கொத்து கொத்தாக மக்கள் மண்ணில் புதைந்தனர்; வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மூச்சடங்கினர். அதிகாலை உறக்கத்திலேயே இப்படி பல உயிர் போனது. இப்போதே மரண கணக்கு 60-ஐ தாண்டி விட்டது. மணிக்கு மணி மரணம் எண்ணிக்கை உயர்கிறது. அப்படி என்ன தான் நடந்தது வயநாட்டில்...? நிலச்சரிக்கு என்ன காரணம்? மீட்பு பணியில் ஏன் இத்தனை சிரமம்? என்பதை இப்போது பார்க்கலாம். வயநாட்டில் உள்ள நகரங்களில் சூரால்மலையும் chooralmala ஒன்று. அதை சுற்றிலும் மலைகளும், குன்றுகளும் அமைந்துள்ளன. சூரால்மலையில் இருந்து இரண்டரை கிலோ மீட்டர் தூரத்தில் முண்டகை என்ற கிராமம் உள்ளது. சூரால்மலை, முண்டகை மற்றும் அதை சுற்றிய பகுதியில் சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. சம்பவம் நடப்பதற்கு முந்தைய 24 மணி நேரம் பேய்மழை விடாது பெய்தது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இன்று அதிகாலை 3:15 மணி இருக்கும். மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, முண்டகை கிராமத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. வீடுகள் அப்படியே சரிந்து நொறுங்கி விழுந்தன. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மக்கள் அலறி துடித்தனர். சுதாரிக்க முடிந்தவர்கள் உயிர் தப்பினர். என்ன நடக்கிறது என்பதை உணர்வதற்குள் பல உயிர் போனது. இது முதல் நிலச்சரிவு தான்.