/ தினமலர் டிவி
/ பொது
/ வயநாடு நிலச்சரிவு இழப்பீடு; வாங்க வாரிசு இல்லை | Wayanad landslides | Kerala landslide |
வயநாடு நிலச்சரிவு இழப்பீடு; வாங்க வாரிசு இல்லை | Wayanad landslides | Kerala landslide |
வயநாட்டில் ஜூலை 30 அன்று முண்டக்கல், சூரல்மலை ஆகிய இடங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் வீடு, உடமைகள் இழந்து நிற்கதியாகினர். 2 கிராமங்களும் நிலச்சரிவில் புதைந்ததில் பல குடும்பம் உயிரை விட்டது. பலர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு மாயமாகினர். சிலரின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டது. ஒட்டு மொத்த நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு கேரள அரசு தலா 6 லட்சமும், பிரதமர் பேரிடர் நிவாரண நிதியாக தலா 2 லட்சமும் அறிவிக்கப்பட்டது.
ஆக 29, 2024