உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கும்! | IMD | Rain | Weather

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கும்! | IMD | Rain | Weather

அரபிக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளது. ரத்னகிரிக்கு வடமேற்கே 40 கிமீ தொலைவில் இது மையம் கொண்டுள்ளது. தொடர்ந்து கிழக்கு நோக்கி நகர்ந்து முற்பகல் ரத்னகிரி- டபோலி இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்து உள்ளது. இதன் எதிரொலியால் தெற்கு கடலோர பகுதிகளிலும் காற்றின் வேகம் அதிகரித்து உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

மே 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ