வங்க மொழி அரசியல் மேற்கு வங்கத்தில் தீவிரம் Mamata Protest against BJP| SIR | West Bengal Politics
மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இன்னும் முழுதாக ஓராண்டு கூட இல்லை. ஆனால் இப்போதே கட்சிகள் அரசியல் ஸ்டன்ட்டில் ஈடுபட துவங்கிவிட்டன. இதனால், மாநிலம் முழுதும் ஆங்காங்கே கலவரங்கள் வெடிப்பதுடன், சட்டம் ஒழுங்கும் சீர்குலைந்துள்ளது. மாநிலத்தை ஆளும் திரிணமுல் காங்கிரஸ், எதிர்க்கட்சியான பாஜ, மாநிலத்தை முன்னால்ஆண்ட கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றையொன்று குறை கூறி குற்றச்சாட்டை முன்வைப்பது அதிகரித்துள்ளது. பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளப்படுவது போல், மேற்கு வங்கத்திலும் மேற்கொள்ள வேண்டும் என பாஜ வலியுறுத்தியுள்ளது. ரோஹிங்கியாக்கள், வங்க தேச ஊடுருவல்காரர்களை வாக்காளர்களாக்கி, அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாக முதல்வர் மம்தா மீது, பாஜ குற்றம்சாட்டியுள்ளது. இதற்கு பதிலடி தரும் வகையில், பிற மாநிலங்களில் வங்க மொழி பேசுவோர் மீது தாக்குதல் நடப்பதாகவும், குறிப்பாக பாஜ ஆளும் மாநிலங்களில் பெங்காலிகள் நசுக்கப்படுவதாகவும் மம்தா குற்றம்சாட்டியுள்ளார்.