உக்ரைன் போர் அமைதி பாதை இந்தியா வழியாக செல்கிறது: டிரம்ப் ஆலோசகர் White House Trade Adviser Peter
ரஷ்யா- உக்ரைன் போரில் அமைதிக்கான பாதை இந்தியா வழியாவே செல்கிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வர்த்த ஆலோசகர் பீட்டர் நவரோ கூறினார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், இந்தியா மீது அமெரிக்க விதித்த 50 சதவீத வரி வரும் 27 ம்தேதி அமலுக்கு வருகிறது. அதற்கான அவகாசத்தை அதிபர் டிரம்ப் நீட்டிக்க வாய்ப்பில்லை எனக்கூறினார். ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதன் மூலம் இந்தியா லாபம் சம்பாதிப்பதாகவும் நவரோ குற்றம்சாட்டினார். நான் இந்தியாவை நேசிக்கிறார். பிரதமர் மோடி சிறந்த தலைவர். உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பு என்ன என்பதை கவனியுங்கள். இப்போதைய சூழலில், நீங்கள் அமைதியை உருவாக்குவதற்கான வேலையை செய்யவில்லை. போரை நிலைநிறுத்துவது போல் இருக்கிறது. இப்போது அவர்களுக்கு எண்ணெய் தேவையில்லை என்றாலும், அதிகபடியாக வாங்கி சுத்திகரித்து அதிக லாபம் ஈட்டுகிறார்கள் என நவரோ கூறினார். அமெரிக்காவிடம் பொருட்களை விற்று கிடைக்கும் பணத்தை இந்தியா, கச்சா எண்ணெய் வாங்க ரஷ்யாவுக்கு கொடுக்கிறது. ரஷ்யர்கள் அந்த பணத்தை வைத்து அதிக ஆயுதங்கள் உருவாக்கி உக்ரேனியர்களை கொல்ல பயன்படுத்துகிறார்கள். இதனால், அமெரிக்கா உக்ரைன் ராணுவத்துக்கு அதிக அளவிலான ஆயுத உதவிகளை வழங்க வேண்டி இருக்கிறது. போர் அமைதிக்கான பாதை இந்தியா வழியாகத்தான் செல்கிறது என டிரம்பின் வர்த்தக ஆலோசகர் நவரோ கூறியுள்ளார். அதாவது, போர் தொடர்வதற்கு இந்தியா தான் காரணம் என்பது போல் அவர் பேசியிருக்கிறார். உக்ரைன் போர் தொடங்கிய பிறகு ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை ஆரம்பத்தில் வரவேற்ற அமெரிக்கா, இப்போது அதன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு இந்தியா மீது கூடுதல் வரி விதிப்பதை ஏற்க முடியாது என நமது வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருந்த நிலையில் டிரம்ப் ஆலோசகர் நவரோ இப்படி சொல்லி இருக்கிறார்.