உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அடல் சேது பாலத்தில் பதற வைத்த சம்பவம் | Woman tries to jump | Atal setu bridge | Saved by cab drive

அடல் சேது பாலத்தில் பதற வைத்த சம்பவம் | Woman tries to jump | Atal setu bridge | Saved by cab drive

மும்பை அடல் சேது கடல் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்ற பெண் மயிரிழையில் காப்பாற்றப்பட்ட சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாலத்தின் தடுப்பு சுவரில் அமர்ந்திருக்கும் பெண்ணிடம் கேப் டிரைவர் பேசிக்கொண்டிருக்கிறார். அதே நேரம் ரோந்து போலீஸ் வாகனம் ஒன்று அங்கு வருகிறது. அப்போது அந்த பெண் கையில் இருந்த எதையோ கடலில் வீசுகிறார். டிரைவர் போலீஸ் வாகனத்தை திரும்பி பார்த்த நொடியில் அந்த பெண் கடலில் குதிக்க முயன்றார். சட்டென காப்பாற்ற முயன்ற டிரைவர் கையில் அந்த பெண்ணின் தலைமுடி மாட்டிக்கொண்டது. அதற்குள் வாகனத்தில் இருந்து ஓடி வந்த போலீசாரும் இணைந்து தங்கள் உயிரை பணயம் வைத்து கடல் பாலத்தின் தடுப்பு சுவரில் ஏறி அந்த பெண்ணை காப்பாற்றுவது அனைத்தும் வீடியோவில் பதிவாகி உள்ளது.

ஆக 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ