/ தினமலர் டிவி
/ பொது
/ தமிழகத்துக்கு ₹945 கோடி நிவாரண நிதி வழங்க மத்திய உள்துறை ஒப்புதல்|Cyclone Fengal |fund|₹945 Crore
தமிழகத்துக்கு ₹945 கோடி நிவாரண நிதி வழங்க மத்திய உள்துறை ஒப்புதல்|Cyclone Fengal |fund|₹945 Crore
பெஞ்சல் புயல் மழை காரணமாக தமிழகத்தின் 14 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. 12 பேர் பலியானார்கள். 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள், 2.11 ஹெக்டேர் பயிர்கள், 9,500 கி.மீ சாலைகள், குளங்கள், பள்ளிகள், சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவை சேதமடைந்தன. வெள்ள பாதிப்பை சீரமைக்க இடைக்கால நிவாரணமாக 2,000 கோடி விடுவிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையிலான குழுவினர் இன்று சென்னை வந்தடைந்தனர்.
டிச 06, 2024