கோவை ஏர்போர்ட்டில் சினிமாவை மிஞ்சிய சம்பவம் | Young girl problem | Husband with other girl | Coimb
கோவை ஏர்போர்ட்டில் இருந்து உள்நாட்டுக்குள் 30 விமானங்கள் இயக்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கு 3 விமானங்கள் செல்கிறது. தினமும் பத்தாயிரம் பயணிகள் மட்டுமின்றி அவர்களை வரவேற்கவும், வழி அனுப்பவும் உறவினர்களும் ஏர்போர்ட் வந்து செல்கின்றனர். புதனன்று இரவு 7.20க்கு சென்னையில் இருந்து கோவை வந்த விமானத்தில் பயணித்த பயணிகள் வெளியே சென்ற பிறகு சிறிது நேரம் கழித்து ஒரு ஆணும், பெண்ணும் வெளியே வந்தனர். அப்போது திடீரென அவர்களை மடக்கிய ஒரு இளம்பெண், என்னை திருமணம் செய்து விட்டு அவளுடன் ஹனிமூன் போயிட்டு வரையாடா பொம்பள பொறுக்கி என திட்டினார். அருகில் இருந்த அந்த இளைஞரின் உறவினர் ஒருவர், சத்தம் போட்ட பெண்ணை இழுத்து பிடித்துக்கொண்டு, அந்த ஜோடியை விடுவித்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், தொடர்ந்து திட்டியபடியே அவர்களை போக விடாமல் தடுக்க முயன்றார். கடைசி வரை அந்த நபர் பிடியில் இருந்து விலகி செல்ல முடியாமல், அந்த ஜோடியும் காரில் ஏறி சென்றதால் கடுப்பான அந்த பெண், தன்னை பிடித்து இழுத்த நபரை ஓங்கி அறைந்தார். என்ன ஏது என்று கேட்ட போலீசிடமும் வாக்குவாதம் செய்தார். கோவை ஏர்போர்ட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.