திருப்பூர் பஸ் ஸ்டாண்ட் சிசிடிவி: முகம் சுளிக்க வைக்கும் சம்பவம்| Young women misbehaving | Tirupur
திருப்பூரில் பெரும் அளவில் வெளி மாவட்ட, வெளி மாநில மக்கள் வசிக்கின்றனர். மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப குற்ற சம்பவங்களும் அதிகம் நடக்கிறது. குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் பஸ்ஸ்டாண்ட் பகுதியில் வழிப்பறி அதிகம். அதிலும் இப்போது பாலியல் தொழில் கும்பலின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. கும்பலாக நிற்கும் பெண்கள் இளைஞர்களை குறி வைத்து அழைக்கின்றனர். அவர்களிடம் சிக்கியவர்களிடம் மிரட்டி பணம் பறிப்பது வாடிக்கையாக உள்ளது. திருப்பூர் காமாட்சி அம்மன் கோயில் வீதியில் உள்ள கடை வாசல்களில் சர்வசாதாரணமாக அமர்ந்து பேரம் பேசுகின்றனர். அங்குள்ள சந்துகளில் பஸ் ஸ்டாண்ட் வரும் ஆண்களை அழைத்து வந்து எல்லை மீறுகின்றனர். இதனால் இந்த பகுதி வழியாக செல்லவே தயக்கமாக உள்ளது என அப்பகுதி மக்கள் சொல்கின்றனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். #Tiruppur #TiruppurNews #TNPolice #PublicSafety #CrimeNews #TamilNadu #Harassment #AlcoholAbuse #Misconduct