உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஜெல்ன்ஸ்கி சொன்ன பதில் | US President Trump | zelenskyy | Russia Ukrain

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஜெல்ன்ஸ்கி சொன்ன பதில் | US President Trump | zelenskyy | Russia Ukrain

உக்ரைனுக்கு இதை செய்தால் பதவியில் இருந்து விலக தயார்! அதிபர் ஜெலன்ஸ்கி விதித்த நிபந்தனை நேட்டோ எனப்படும் ராணுவ கூட்டணியில் சேர உக்ரைன் முயன்றதை எதிர்த்த ரஷ்யா அந்நாட்டு மீது 2022ல் போரை தொடங்கியது. 3 ஆண்டாக போர் தொடர்கிறது. போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா உதவியது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்து போரை நிறுத்த முயன்று வருகிறார். இது தொடர்பாக அமெரிக்கா- ரஷ்ய அதிகாரிகள் சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உக்ரைனுக்கு அழைப்பு இல்லை. 3 ஆண்டாக போரை நிறுத்த முயற்சிக்காத உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, இக்கூட்டத்தில் இருப்பது முக்கியம் இல்லை என அதிபர் டிரம்ப் கூறினார். நேட்டோவில் உக்ரைனை இணைப்பது நடைமுறைக்கு உகந்தது இல்லை; போரை முடிவுக்கு கொண்டுவராமல், அதன் மூலம் தேர்தலை நடத்தவிடாமல் ஜெலன்ஸ்கி சர்வாதிகாரி போல நடத்து கொள்கிறார். அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் டிரம்ப் கூறியிருந்தார். இதற்கு, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பதில் அளித்துள்ளார். உக்ரைன் நிலைப்பாட்டை அதிபர் டிரம்ப் புரிந்து கொள்ள வேண்டும். ரஷ்யாவிடம் இருந்து உக்ரைனை பாதுகாப்பதற்கான வாக்குறுதியை எதிர்பார்க்கிறோம். நான் பதவி விலகினால்தான் உக்ரைனில் அமைதி திரும்பும் என நினைத்தால், அதற்கும் நான் தயார். உக்ரைன் நாட்டை நேட்டோ அமைப்பில் சேர்த்துக்கொண்டால், உடனடியாக பதவி விலகவும் தயார் என அதிபர் ஜெலன்ஸ்கி கூறியிருக்கிறார்.

பிப் 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை