இபிஎஸ் மீது அதிருப்தி: சொற்ப எண்ணிக்கையில் கூடும் தொண்டர்கள்:
அதிமுக கடந்த ஏப்ரலில் பாஜவுடன் கூட்டணி அமைத்து கூட்டணியை வலுப்படுத்தப் போவதாக அறிவித்தது. 7 மாதங்கள் ஆகியும் புதிதாக எந்தக் கட்சியும் கூட்டணிக்கு வரவில்லை. பா.ம.க., பிளவுபட்டுள்ளது. திமுகவுடன் தேமுதிக பேசி வருகிறது. நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளது. தவெக பொதுக்குழுவில் விஜய்தான் முதல்வர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால், விஜய் கூட்டணிக்கு வந்து விடுவார் என்ற கடைசி நம்பிக்கையும் தகர்ந்துள்ளது.
நவ 08, 2025