உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / விநாயகர் சதுர்த்திக்கு பட்ட அடியால் விழித்துக்கொண்ட விஜய் | Actor vijay | Aayutha pooja wishes | TVK

விநாயகர் சதுர்த்திக்கு பட்ட அடியால் விழித்துக்கொண்ட விஜய் | Actor vijay | Aayutha pooja wishes | TVK

நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை துவக்கியுள்ளார். தமிழகத்தின் முக்கிய நிகழ்வுகள் தொடர்பான கருத்துகளை, அறிக்கை வாயிலாகவும், சமூக வலைதள பதிவுகள் வாயிலாகவும் தெரிவித்து வருகிறார். விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு விஜய் வாழ்த்து தெரிவிக்கவில்லை. இதற்கு பாஜ தலைவர்கள் மற்றும் ஹிந்து அமைப்பினர் கடுமையாக விமர்சித்தனர். இந்த சூழலில் ஆயுதபூஜைக்கு விஜய் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அவரது வாழ்த்து செய்தியில், தொழில் வளத்தில் தொடர்ந்து முன்னேற ஆதாரமாக விளங்கும் தொழில் கருவிகளையும், பயன்படுத்தும் வாகனங்களையும், அறிவை போதிக்கும் புத்தகங்களையும் வணங்கி வழிபடும் விழாக்கள் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி. இந்த திருநாள்களில் மேற்கொள்ளும் அனைத்து புதிய முயற்சிகளும் வெற்றிப்பெற இனிய நல்வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். தவெகவை சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவர் கூறும்போது, திராவிட இயக்கத்தவர்களை போல, இந்த விஷயத்தில் முரண்பட்ட அரசியல் செய்ய நடிகர் விஜய்க்கு விருப்பம் இல்லை என சொன்னார். அனைத்து தரப்பு மக்களின் ஓட்டுகளையும் பெறும் நோக்குடன் தான், அவர் தமிழக வெற்றிக்கழகத்தை துவக்கி உள்ளார். அனைத்து ஜாதி மற்றும் மதத்தை சேர்ந்தவர்களின் உணர்வுகளை மதிக்கும்விதமாக முதல் கட்டமாக ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அடுத்து, எல்லா இன மக்களின் பண்டிகைகளுக்கும் வாழ்த்து சொல்வார்.

அக் 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !