தவெக மாநாடு பின்னணி பற்றி ரகசியமாக விசாரிக்கும் உளவுத்துறை | Actor Vijay | TVK | State conference
தவெக மாநாடு பின்னணி பற்றி ரகசியமாக விசாரிக்கும் உளவுத்துறை | Actor Vijay | TVK | State conference | TN Intelligence investigate தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரத்தில் ஒருவரான விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி, முதல் மாநில மாநாட்டையும் வெற்றிகரமாக நடத்தி முடித்துவிட்டார். விக்கிரவாண்டியில் நடந்த மாநாட்டில் லட்சக்கணக்கானோர் குவிந்தது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 2026 சட்டசபை தேர்தல் தான் தனது இலக்கு என கட்சி தொடங்கியது முதலே சொல்லி வரும் விஜய், திமுகவை தனது அரசியல் எதிரியாக மாநாட்டில் அறிவித்தார். அதோடு, தங்கள் தலைமையில் ஆட்சி அமைந்தால், ஆட்சி அதிகாரத்தில் கூட்டணி கட்சிகளுக்கு பங்கு வழங்கப்படும் எனவும் அறிவித்து சலசலப்பை ஏற்படுத்தினார். அரசியல் கட்சி, மாநாடு, 2026 தேர்தல் களம், கூட்டணி என நடிகர் விஜயின் தொடர் அறிவிப்புகள் த.வெ.க தொண்டர்களை உற்சாகப்படுத்தியது. மாநாடு மிகப்பெரிய அளவில் கவனம் பெற்ற நிலையில் தமிழக உளவுத்துறை இது தொடர்பாக தீவிர விசாரணையில் இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய் மாநாட்டுக்கு இவ்வளவு பேர் வந்தது எப்படி, எந்தெந்த ஊர்களில் இருந்து வந்தார்கள். எப்படி கூட்டம் கூட்டப்பட்டது. கூட்டத்திற்கு வந்தவர்கள் யார், திரட்டியது யார், செலவு செய்யப்பட்டது எவ்வளவு என்றெல்லாம் விசாரணை நடக்கிறதாம்.