போலீஸ் மீது எழும் தொடர் புகார்களை தொடர்ந்து 35 கட்டளைகளை பின்பற்ற சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டு உள்ளார்.
புகார்கள் மீது உடனடியாக எப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும்.
புகார் அளிக்க வருவோரிடம், பேப்பர் வாங்கவோ, அதிகாரி இல்லை என சொல்லி அலைக்கழிக்கவோ கூடாது.
ஸ்டேஷனில் எப்போதும் போலீசார் இருக்க வேண்டும்.
முக்கிய பாதுகாப்பு பணிகளில் பெண் போலீசாரை நியமிப்பதை தவிர்க்க வேண்டும்.
சாலை மறியல், போராட்டம் போன்றவற்றில் தேவையின்றி லத்தி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
கர்ப்பிணி, குழந்தைகள் பெற்ற பெண் போலீசாருக்கு அவர்கள் கேட்கும் இடத்திற்கு பணி மாறுதல் வழங்க வேண்டும்.
விசாரணை கைதிகளை, தேவையில்லாமல் துன்புறுத்தக் கூடாது.
அனுபவம் இல்லாத போலீசாரை, சிறப்பு மற்றும் தனிப்படையில் அமர்த்தக் கூடாது.
சிறப்பு மற்றும் தனிப்படை போலீசார், பொறுப்பு அதிகாரி இல்லாமல் தனிப்பட்ட முறையில் விசாரிக்கக் கூடாது.
ஒரு நபரை மூன்று பேர் ஒன்றாக சேர்ந்து விசாரிக்கக்கூடாது.
லாக் அப் மரணம் மற்றும் வன்முறை இருக்கக் கூடாது
குடும்பமாக செல்வோரிடம், வாகன சோதனை என்ற பெயரில் துன்புறுத்தல் கூடாது.
காதல் மற்றும் கலப்பு திருமண விவகாரங்களில், போலீஸ் ஸ்டேஷனில் கட்டப்பஞ்சாயத்து செய்ய கூடாது என எச்சரித்து உள்ளார்.