உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / செங்கோட்டையன் பின்னணியில் திமுக ஸ்கெட்-பகீர் தகவல் | admk vs dmk | tn election 2026 | sengottaiyan

செங்கோட்டையன் பின்னணியில் திமுக ஸ்கெட்-பகீர் தகவல் | admk vs dmk | tn election 2026 | sengottaiyan

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் 3 கட்ட பயணத்தில் 100 தொகுதிகளில் பிரசாரம் செய்து இருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி. 4ம் கட்ட பயணத்துக்காக இப்போது மதுரையில் இருக்கிறார். போகும் இடமெல்லாம் கூடும் கூட்டம் அவருக்கும், அவரது கட்சியினருக்கும் பெரிய உற்சாகத்தை தந்திருக்கிறது. ஆனால் இதை ஆளுங்கட்சியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதனால் திமுகவுக்கு எதிரான சக்திகளை ஒன்றுசேர விடாமல் சிதறடிக்கும் வேலையில், ஆளும் தலைமை இறங்கியிருக்கிறது. இதற்காக பல குழுக்களை அமைத்துள்ளது. இவை களத்தில் பம்பரமாக சுழன்று வருகின்றன. இதன் பின்னணியில் பல திடுக்கிடும் தகவல் இருப்பதை விபரம் அறிந்த முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவர் கூறினார். அவர் சொன்னது: மீண்டும் ஆட்சிக்கு வந்தே ஆக வேண்டும் என்ற ஆக்ரோஷத்தில் திமுக இருக்கிறது. அதிகாரத்தை தக்க வைக்க பல முனைகளிலும் ஆட்களை களம் இறக்கி விட்டுள்ளனர். எதிர்ப்பு ஓட்டுகளை சிதறடிக்க வேண்டும் என்பது அவர்களுடைய இலக்கு. அதிமுக, திமுகவுக்கு அடுத்து 3வது சக்தியாக உருவாகி வரும் நடிகர் விஜய், எக்காரணம் கொண்டும் அதிமுகவோடு கைகோர்த்து விடக்கூடாது என்பதில் அவர்கள் தெளிவாக இருக்கின்றனர். கூடவே அதிமுக-பாஜ கூட்டணியை பல வகைகளிலும் பலவீனப்படுத்தும் வேலைகளையும் செய்து வருகின்றனர். குறிப்பாக அதிமுகவில் இருக்கும் பெரும் தலைகளை, அங்கிருந்து வெளியே கிளப்பும் வேலையை செய்யுமாறும் சிறப்பு குழுக்களுக்கு அசைன்மென்ட் போய் இருக்கிறது. அவர்களின் முயற்சிக்கு கிடைத்த முதல் வெற்றி தான் அன்வர் ராஜா. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்தார். பின்னர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்தார். இதற்கு பலனாக அவருக்கு சிறப்பு சலுகைகளும் செய்யப்பட்டதாக தகவல். அவரைப் போலவே அதிமுக தலைமை மீது வெறுப்பில் இருக்கும் பலரையும் இழுக்கும் திட்டம் திமுக வசம் இருக்கிறது. ஒன்று, திமுகவுக்கு வாருங்கள்; இல்லை என்றால், தவெக பக்கம் போய்விடுங்கள் என்பதே இப்பணியை மேற்கொண்டிருக்கும் திமுக புள்ளிகளால் அதிமுக முக்கியஸ்தர்களுக்கு தரப்படும் அன்பான நெருக்கடி. ஆளும் தரப்பின் வலைவிரிப்பு தெரிந்திருந்தும், கட்சிக்குள் புகைச்சல் இருப்பதை அறிந்திருந்தும், அனைவரையும் ஒருங்கிணைத்துச் செல்ல மறுக்கும் பழனிசாமியின் அணுகுமுறையால், திமுக புள்ளிகளின் ஆள் இழுப்பு வேலை எளிதாக நடப்பதாக சொல்லப்படுகிறது. இப்போது, அன்வர் ராஜாவுக்கு அடுத்து பழனிசாமிக்கு எதிராக குண்டு வீச தயாராகி வருகிறார், ஈரோட்டைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். 5ம் தேதி முடிவை அறிவிப்பேன் என்று கெடு விதித்திருக்கிறார்; யாருக்காக, எதற்காக அவர் காத்திருக்கிறார் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. இதற்கிடையில், பழனிசாமிக்கு போட்டியாக சசிகலாவை மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் செய்ய வைத்து, அதிருப்தியாளர்களை அணிசேர்க்கும் திட்டமும் இன்னொரு பக்கம் தயாராகி வருகிறது. அதற்கு பின்னணியில் பன்னீர்செல்வம், தினகரன் மட்டுமின்றி, பழனிசாமிக்கு நெருக்கமான சில முன்னாள் அமைச்சர்களும் இருப்பதாக தெரிகிறது. இந்த பயணத்திற்கு பின் பழனிசாமிக்கு எதிரான தங்கள் அரசியல் போக்கை தீவிரப்படுத்த விஜய் பக்கம் செல்லவும் திட்டமிடுகின்றனர். அதை வாய்ப்பாக எடுத்து, அவர்களை நல்லபடியாக விஜய் பக்கம் அனுப்பி வைக்க அனைத்து வேலைகளையும் ஆளும் திமுக தரப்பு செய்து வருகிறது. அதே போல் அதிமுக, பாஜ கூட்டணி வெற்றிக்காக யாரெல்லாம் மும்முரமாக களத்தில் பணியாற்றுகின்றனர் என்ற விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. அவர்களின் வேகத்துக்கு பணக்கட்டுகளால் முட்டுக்கட்டை போட முடிவு செய்துள்ளனர். அதற்கு மசியவில்லை என்றால், போக்ஸோ உள்ளிட்ட வழக்குகள் பாயலாம் என்றும் பயமுறுத்த வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. தனக்கு எதிராக கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் சுழன்றடிக்கப் போகும் சூறாவளியை பழனிசாமி எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பது தெரியவில்லை என விபரம் தெரிந்த அந்த அரசியல் புள்ளி சொன்னார். #TamilNaduElection2026 #ADMKvsDMK #DMKvsBJP #TamilNadu #Election2026 #PoliticalDebate #TamilPolitics #DMK #ADMK #BJP #ElectionCampaign #Vote2026 #PoliticalAnalysis #ElectionWatch #TamilNaduVotes #VoterAwareness #PoliticalRivalry #DemocracyInAction #StateElections #ElectionUpdates

செப் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை